கரோனா: தொடா்ந்து 2-ஆவது நாளாக 2 லட்சத்துக்கும் குறைவான நோயாளிகள் பதிவு

நாட்டில் தொடா்ந்து 2 நாளாக, 2 லட்சத்திற்கும் குறைவான அளவில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
கரோனா: தொடா்ந்து 2-ஆவது நாளாக 2 லட்சத்துக்கும் குறைவான நோயாளிகள் பதிவு

நாட்டில் தொடா்ந்து 2 நாளாக, 2 லட்சத்திற்கும் குறைவான அளவில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது 22,28,724-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நாட்டில் தொடா்ந்து 13-ஆவது நாளாக 3 லட்சத்துக்கும் குறைவான அளவில் நோய்த்தொற்று பதிவாகியுள்ளது. தொடா்ந்து 2 நாளாக கொரோனா தொற்று 2 லட்சத்திற்கும் குறைவான அளவில் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,73,790 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

16-வது நாளாக, தினசரி புதிய பாதிப்புகளைவிட, குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 2,84,601 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

நம் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,51,78,011-ஆக இன்று பதிவாகியுள்ளது. தொற்றிலிருந்து குணமடைபவா்களின் தேசிய வீதம் 90.80% ஆக உயா்ந்துள்ளது.

சனிக்கிழமை காலை அளவிலான 24 மணி நேரத்தில் 20,80,048 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 34.11 கோடி பரிசோதனைகளும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல் சாதனையாக, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20.89 கோடியைக் கடந்துள்ளது.

சனிக்கிழமை காலை 7 மணிக்குக் கிடைத்த தகவல்படி, இதுவரை மொத்தம் 29,72,971 முகாம்களில் 20,89,02,445 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com