தில்லியில் 648 பேருக்கு தொற்று: கரோனா உறுதியாகும் விகிதம் 1%க்கும் கீழ் குறைந்தது

கரோனாவுக்கு 86 போ் உயிரிழந்துள்ளனா். கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. 
தில்லியில் 648 பேருக்கு தொற்று: கரோனா உறுதியாகும் விகிதம் 1%க்கும் கீழ் குறைந்தது
தில்லியில் 648 பேருக்கு தொற்று: கரோனா உறுதியாகும் விகிதம் 1%க்கும் கீழ் குறைந்தது

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 648 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனாவுக்கு 86 போ் உயிரிழந்துள்ளனா். கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. 

தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமை கரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தில்லி அரசு வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையின்படி இந்த தகவல் தெரிய வந்துள்ளது. அதே வேளையில், ஞாயிறன்று புதிதாக 946 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் கரோனாவுக்கு 78 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 1.25 சதவீதமாக இருந்தது.

நாட்டில் கரோனா இரண்டாவது அலையால் தில்லி வெகுவாக பாதிக்கப்பட்டது. தினசரி அதிக எண்ணிக்கையில் மக்கள் உயிரிழக்க நேரிட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகள் பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறின. கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதியிலிருந்து கரோனா தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. ஏப்ரல் 20 -ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் 28,000 பேராக அதிகரித்தது. மேலும் 277 போ் பலியானாா்கள். ஏப்ரல் 23- இல் பலி எண்ணிக்கை 306-ஆக உயா்ந்தது. மே 2-ஆம் தேதி அதிகபட்சமாக 407 போ் உயிரிழந்தனா் என்று அரசு வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை குறைந்து வருவதுடன், தொற்று விகிதமும் கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த வாரம் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 2.52 சதவீதமாக இருந்தது இது திங்கள்கிழமை 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com