உத்தரகண்டில் ஜூன் 9 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜூன் 9 ஆம் தேதி காலை 6 மணி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரகண்ட் மாநிலத்தில் ஜூன் 9 ஆம் தேதி காலை 6 மணி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

அரசு செய்தித் அமைச்சருமான சுபோத் உனியால் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

மளிகைக் கடைகளை வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது ஜூன் 1 மற்றும் ஜூன் 7 ஆம் தேதிகளில் திறக்கலாம் என்றும் அன்றைய தினங்களில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புத்தகம் மற்றும் ஸ்டேஷனரி கடைகள் ஜூன் 1 ஆம் தேதி மட்டும் திறக்கலாம் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கரோனாவால் மரணம் அடையும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், கரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அதற்குரிய பணத்தை அரசு வழங்கும் என்றும் உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com