
நாட்டின் 13 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது. தற்போது பிற்பகல் 2 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.
அஸ்ஸாம் (5), மேற்கு வங்கம் (4), மத்திய பிரதேசம் (3), ஹிமாசல பிரதேசம் (3), மேகாலயம் (3), பிகாா் (2), கா்நாடகம் (2), ராஜஸ்தான் (2), ஆந்திரம் (1), ஹரியாணா (1), மகாராஷ்டிரம் (1), மிஸோரம் (1), தெலங்கானா (1) ஆகிய 13 மாநிலங்களில் உள்ள 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை இடைத்தோ்தல் நடத்தப்பட்டது.
அதேபோல, தாத்ரா-நகா் ஹவேலி, ஹிமாசல பிரதேசத்தின் மண்டி, மத்திய பிரதேசத்தின் கந்த்வா ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.
இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றன.
சட்டப்பேரவைத் தேர்தல் முன்னிலை
மாநிலம் | மொத்த தொகுதிகள் | முன்னிலை நிலவரம் | வெற்றி |
அஸ்ஸாம் | 5 |
பாஜக-2 ஐக்கிய மக்கள் கட்சி (யுபிபிஎல்)-2 |
பாஜக -1 |
மேற்கு வங்கம் | 4 | திரிணமூல் காங். - 3 | திரிணமூல் காங். - 1 |
மத்திய பிரதேசம் | 3 |
பாஜக -2 காங். -1 |
|
மேகாலயம் | 3 |
தேசிய மக்கள் கட்சி - 2 ஐக்கிய ஜனநாயகக் கட்சி - 1 |
|
ஹிமாச்சல் | 3 |
காங். - 3 |
|
பிகாா் | 2 |
ஐக்கிய ஜனதா தளம் -1 ராஷ்டிரிய ஜனதா தளம் - 1 |
|
கா்நாடகம் | 2 |
காங். -1 |
பாஜக - 1 |
ராஜஸ்தான் | 2 | காங். - 2 | |
ஆந்திரம் | 1 | ஒய்எஸ்ஆர் காங். - 1 | |
ஹரியாணா | 1 | லோக் தளம் - 1 | |
மகாராஷ்டிரம் | 1 | காங். - 1 | |
மிஸோரம் | 1 | மிஸோ. தேசிய முன்னணி - 1 | |
தெலங்கானா | 1 | பாஜக -1 |
மக்களவைத் தேர்தல் முன்னிலை
மாநிலம் | முன்னிலை கட்சி |
தாத்ரா-நகா் ஹவேலி | சிவசேனை |
மண்டி, ஹிமாச்சல் | காங்கிரஸ் |
காண்டிவா, ம.பி. | பாஜக |