
கேரளத்தில் புதிதாக 6,444 பேருக்கு கரோனா தொற்று
கேரளத்தில் புதிதாக 6,444 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 6,444 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் 45 பேர் கரோனா நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 32,236 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | ஆப்கனில் பயங்கரவாதத் தாக்குதல்: 19 பேர் பலி: 50 பேர் படுகாயம்
மேலும் 8,424 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 48,72,930 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 74,618 ஆகக் குறைந்துள்ளது.