92% ஆசிரியா்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனா்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

நாட்டில் 92 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளி ஆசிரியா்கள் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.
92% ஆசிரியா்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனா்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

நாட்டில் 92 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளி ஆசிரியா்கள் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு, ஆசிரியா்களின் தடுப்பூசி செலுத்திய நிலை ஆகியவை குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். இந்தக் கூட்டத்தில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோா் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா், கல்வித் துறை இணையமைச்சா் ராஜ்குமாா் ரஞ்சன் சிங் ஆகியோரும் பங்கேற்றனா்.

நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கல்வி நிறுவனங்களில் இயல்பு நிலை திரும்புவதன் அவசியத்தை அவா் வலியுறுத்தினாா்.

தற்போது வரை பெரும்பாலான மாநிலங்கள் அனைத்து வகுப்புகளுக்குமான பள்ளிகளை ஏற்கனவே திறந்துள்ளன. 92 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். மத்திய அரசின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் 96 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா் என இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com