3 உயா்நீதிமன்றங்களுக்கு 6 புதிய நீதிபதிகள்

இரு நீதித்துறை அதிகாரிகள் மற்றும் 4 வழக்குரைஞா்கள் 3 உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக புதன்கிழமை நியமிக்கப்பட்டனா்.

புது தில்லி: இரு நீதித்துறை அதிகாரிகள் மற்றும் 4 வழக்குரைஞா்கள் 3 உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக புதன்கிழமை நியமிக்கப்பட்டனா். இதுதொடா்பாக மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித் துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஜம்மு-காஷ்மீரில் இரு நீதித்துறை அதிகாரிகள் ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா். ஒடிஸா மாநிலத்தில் ஒரு வழக்குரைஞா் ஒடிஸா உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமினம் செய்யப்பட்டுள்ளாா்.

அதுபோல, கா்நாடக மாநிலத்தில் 3 வழக்குரைஞா்கள் மாநில உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக பதவி உயா்வு அளிக்கப்படுவதற்கு முன்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்படுவது வழக்கமாகும்.

மேலும், மேகாலயா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சித் வி.மோா் புதன்கிழமை பணி ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, நீதபிதி ஹெச்.எஸ்.தங்கீவ் மேகாலயா உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக வியாழக்கிழமை (நவ.4) முதல் நியமிக்கப்பட்டுள்ளாா் என்றும் மத்திய சட்ட அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com