அபாய கட்டத்தை எட்டிய காற்றுமாசு; தொண்டை, கண் எரிச்சலால் தவிக்கும் மக்கள்

வெள்ளிக்கிழமை காலை, ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பிஎம் 2.5 என்ற நுண் துகள்களின் அளவு 999ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டின் தலைநகர் தில்லியில் காற்றின் தரம் நேற்று இரவு தீவிரமாக இருந்த நிலையில், தீபாவளி பண்டிகையை தொடர்ந்து இன்று காலை அது அபாய கட்டத்தை எட்டியுள்ளது. நகரின் காற்றின் தரக் குறியீடு தொடர்ந்து மோசமாகிவருகிறது. நேற்று மாலை 4 மணிக்கு, காற்றின் தரம் 382 ஆக இருந்தது. 

8 மணி அளவில், வெப்ப நிலை குறைந்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக மாசு நகரம் முழுவதும் பரவ தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை, ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பிஎம் 2.5 என்ற நுண் துகள்களின் அளவு ஒரு கன மீட்டருக்கு 999ஆக அதிகரித்தது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட அளவு 25ஆகும்.

காற்றில் பரவும் 2.5 வகை நுண் துகள்கள், நுரையீரல் புற்றுநோய் போன்ற இருதய மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தும். அனைத்து உலகத் தலைநகரங்களையும் விட மோசமான காற்றின் தரம் தில்லியில் பதிவாகியுள்ளது. குறிப்பாக, வெள்ளிக்கிழமையன்று, காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. பசுமை பட்டாசு உள்பட அனைத்து வகை பட்டாசுகளை வெடிக்க தில்லி அரசு தடை விதித்துள்ள நிலையிலும், பெரும்பாலான இடங்களில் மக்கள் விதிகளை மீறி பட்டாசு வெடித்தனர்.

இரவு 9 மணிக்கு மேலாக, மக்கள் அதிக அளவில் பட்டாசு வெடித்த நிலையில், தில்லிக்கு அண்டை நகரமான ஃபரிதாபாத் (424), காசியாபாத் (442), குர்கான் (423),  நொய்டா (431) என்ற அளவில் காற்றின் தரம் பதிவானது. 

இதுகுறித்து ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர் சுனில் தஹியா கூறுகையில், "தில்லியில் பட்டாசு தடை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. இது தற்போதுள்ள வற்றாத ஆதாரங்களின் மேல் அபாயகரமான மாசு அளவை சேர்க்க வழிவகுத்தது.

தெற்கு தில்லியில் உள்ள லஜ்பத் நகர், வடக்கு தில்லியில் உள்ள புராரி, மேற்கு தில்லியில் உள்ள பஸ்சிம் விஹார் மற்றும் கிழக்கு தில்லியில் உள்ள ஷாஹ்தாரா ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் இரவு 7 மணிக்கே பட்டாசு வெடிக்க தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், மாலை நேரத்தில் குறைவான அளவிலேயே பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. 

தொண்டை மற்றும் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாக நகர் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் விசிக்கும் மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். ஹரியாணா அரசு தேசிய தலைநகர் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com