ராஜஸ்தானில் வருமான வரித்துறை சோதனை: ரூ.2.31 கோடி ரொக்கம், ரூ.2.48 கோடி நகைகள் பறிமுதல் 

ராஜஸ்தானில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானில் வருமான வரித்துறை சோதனை: ரூ.2.31 கோடி ரொக்கம், ரூ.2.48 கோடி நகைகள் பறிமுதல் 

ராஜஸ்தானில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரித்துறையினர் 28.10.2021 அன்று ராஜஸ்தானின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள ரியல் எஸ்டேட், மணல் குவாரி மற்றும் மதுபான வியாபாரம் செய்து வரும் குழுமங்களுக்கு தொடர்புடைய 33 இடங்களில் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை வருமான வரித்துறையினர் மேற்கொண்டனர்.

சோதனையின் போது, ​​கணக்கில் வராத பணம் மற்றும் நிலம் வாங்குவதற்கு பயன்படுத்தியதற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. மேலும், பண பரிவர்த்தனை மூலம் மணல் விற்பனை செய்ததற்கான ஆவண ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பண பரிவர்த்தனைகள் குறித்து கணக்குப் புத்தகங்களில் பதிவு செய்யப்படாததும் தெரியவந்தது.

இந்த அதிரடி தேடுதல் நடவடிக்கையில் கணக்கில் வராத ரூ. 2.31 கோடி ரொக்கம் மற்றும் ரூ. 2.48 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்த தேடுதல் நடவடிக்கையின் மூலம்  கணக்கில் வராத மொத்த வருமானம் ரூ. 50 கோடிக்கும் அதிகமான வருவாய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கணக்கில் காட்டப்படாத வருமானம் ரூ. 35 கோடிக்கும் அதிகமான வருமானத்தை ஒப்புக்கொண்டதுடன் அதற்குரிய வரியை செலுத்தவும் முன்வந்துள்ளனர்.  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com