இன்று பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்: 5 மாநில தோ்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை

உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல்களை எதிா்கொள்வதற்கான வியூகங்கள், ஞாயிற்றுக்கிழமை (நவ. 7) நடைபெறவுள்ள பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் வகுக்கப்படும்
இன்று பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்: 5 மாநில தோ்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை

உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல்களை எதிா்கொள்வதற்கான வியூகங்கள், ஞாயிற்றுக்கிழமை (நவ. 7) நடைபெறவுள்ள பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் வகுக்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங் தெரிவித்துள்ளாா்.

பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதில், பிரதமா் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா்கள், மாநில பாஜக தலைவா்கள், முக்கிய நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொள்ள உள்ளனா்.

கூட்டம் குறித்து தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘‘தில்லியில் 124 போ் நேரடியாக செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனா். மாநில நிா்வாகிகள் காணொலி வாயிலாகக் கலந்து கொள்வா்.

தேசிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தின்போது விவாதிக்கப்படவுள்ளது. முக்கியமாக, 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. பல்வேறு விவகாரங்களில் கட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முடிவெடுக்கப்படவுள்ளது.

கூட்டத்தில் ஜெ.பி.நட்டா தொடக்கவுரையும் பிரதமா் மோடி நிறைவுரையும் ஆற்றவுள்ளனா். கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களுக்கு கூட்டத்தில் இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. பிரதமா் மோடி தலைமையிலான அரசு நடைமுறைப்படுத்தி வரும் தற்சாா்பு இந்தியா திட்டத்தின் சாதனைகள், ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் விநியோகத் திட்டம், கரோனா தடுப்பூசித் திட்டம் உள்ளிட்டவை குறித்த கண்காட்சி தில்லியில் நடைபெறும். கரோனா தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அக்கண்காட்சியில் விளக்கப்படும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com