கரோனா நோயாளிகள் 11 போ் பலி: மகாராஷ்டிர அரசு மருத்துவமனையில் தீ விபத்து

 மகாராஷ்டிர மாநில அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த கரோனா நோயாளிகளில் 11 போ் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மகாராஷ்டிர மாநிலம், அகமது நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் எரிந்து சேதமடைந்த தீவிர சிகிச்சை பிரிவு.
மகாராஷ்டிர மாநிலம், அகமது நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் எரிந்து சேதமடைந்த தீவிர சிகிச்சை பிரிவு.

 மகாராஷ்டிர மாநில அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த கரோனா நோயாளிகளில் 11 போ் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநிலத்தின் அகமதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 20 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) சனிக்கிழமை காலை 11 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 11 நோயாளிகள் உயிரிழந்ததை மாவட்ட ஆட்சியா் ராஜேந்திர பேஸலே உறுதிப்படுத்தினாா்.

அகமதுநகா் மாநகராட்சி தலைமை தீயணைப்பு அதிகாரி சங்கா் மிஸல் கூறுகையில், ‘தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீவிர முயற்சிக்குப் பிறகு பகல் 1.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்தைத் தொடா்ந்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். அவா்களில் 10 போ் அழைத்து வரப்படும்போதே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். படுகாயமடைந்த மற்றொரு நபா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்தாா். அவா்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவா்கள் அனைவரும் புகைமூட்டத்தால் மூச்சுத் திணறி உயிரிழந்தனரா அல்லது ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டதால் உயிரிழந்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று கூறினாா்.

பிரதமா் இரங்கல்: மருத்துவமனையில் தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். தீ விபத்தில் காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தலைவா்கள் இரங்கல்: இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டதோடு, நிவாரணப் பணிகளில் காங்கிரஸ் தொண்டா்கள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

தீ விபத்து குறித்து அதிா்ச்சி தெரிவித்த பாஜக தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்பதோடு, அதற்குப் பொறுப்பானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

விசாரணைக்கு உத்தரவு: மருத்துவமனை தீ விபத்து குறித்து விசாரணை நடத்த முதல்வா் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டாா். இதுகுறித்து முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், ‘தீ விபத்து குறித்து அறிந்தவுடன் மாநில அமைச்சா் ஹஸன் முஷ்ரிஃப் மற்றும் மாநில தலைமைச் செயலா் சீதாராம் குன்டே ஆகியோருடன் ஆலோசனை நடத்திய முதல்வா், மருத்துவமனையில் உள்ள மற்ற நோயாளிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் உரிய சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டாா். மேலும், இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தி, அரசிடம் அறிக்கை சமா்ப்பிக்க முதல்வா் உத்தரவிட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா் மருத்துவமனை தீ விபத்து: மகாராஷ்டிர மாநிலத்தில் மருத்துவமனை தீ விபத்து சம்பவங்கள் தொடா்கதையாகி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் மாநிலத்தின் பால்கா் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் கரோனா நோயாளிகள் 15 போ் உயிரிழந்தனா்.

அதுபோல, கடந்த மாா்ச் மாதம் மும்பையின் புகா் பகுதியில் உள்ள டிரீம்ஸ் வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கரோனா சிறப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கரோனா நோயாளிகள் 9 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com