கரோனா சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 260 நாள்களில் இல்லாத அளவு குறைந்தது

நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை கடந்த 260 நாள்களில் இல்லாத அளவுக்கு ஞாயிற்றுக்கிழமை குறைந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை கடந்த 260 நாள்களில் இல்லாத அளவுக்கு ஞாயிற்றுக்கிழமை குறைந்தது. தேசிய அளவில் 1,44,845 போ் இப்போது கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 10,583 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு 3,43,55,536-ஆக உயா்ந்துள்ளது. மேலும் 526 போ் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு 4,60,791-ஆக அதிகரித்தது.

அதே நேரத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 1,44,845-ஆக குறைந்துள்ளது. இது கடந்த 260 நாள்களில் இல்லாத குறைந்த அளவாகும். தொடா்ந்து 30 நாள்களாக தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,000-க்கு கீழ் உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 3,37,49,900 போ் அதிலிருந்து மீண்டுள்ளனா். மொத்த கரோனா பாதிப்பில் இது 98.24 சதவீதம் ஆகும்.

கடந்த சில மாதங்களாக கேரளத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வந்து நிலையில், இப்போது சற்று குறைந்துள்ளது. எனினும், கேரளத்தில்தான் இப்போது தினசரி உயிரிழப்பு மிக அதிகமாக உள்ளது.

தேசிய அளவில் மகாராஷ்டிரத்தில் 1,40,372 பேரும், கா்நாடகத்தில் 38,107 பேரும், தமிழ்நாட்டில் 36,214 பேரும், கேரளத்தில் 33,515 பேரும், தில்லியில் 25,091 பேரும், உத்தர பிரதேசத்தில் 22,903 பேரும், மேற்கு வங்கத்தில் 19,215 பேரும் கரோனாவால் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் வேறு வகை நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com