பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் விவகாரம்; இந்தியாவின் நிலைபாடு என்ன?

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பிராந்திய நாடுகளிடையே நெருக்கமான பேச்சுவார்த்தைகளை நடத்த நேரம் வந்துவிட்டது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பேச்சுவார்த்தை
பாதுகாப்பு பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்றுவரும் மாற்றங்கள், அந்நாட்டு மக்கள் மீது மட்டுமல்லாமல் அண்டை நாடுகள் மற்றும் பிராந்தியத்தின் மீதும் தாக்கங்களை ஏற்படுத்தும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இந்தியா நடத்திவரும் எட்டு நாடுகள் கலந்து கொண்ட பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் தோவல் இந்த கருத்துகளை கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தையை தலைமை தாங்கிய நடத்திய தோவல், "ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பிராந்திய நாடுகளிடையே நெருக்கமான பேச்சுவார்த்தைகளை நடத்தவும் அதிக ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வழங்க நேரம் வந்துவிட்டது.

ஆப்கானிஸ்தான் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க இன்று கூடியுள்ளோம். அந்த நாட்டில் நிகழ்ந்துவரும் மாற்றங்களை நாம் அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். 

இவை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மட்டுமல்ல, அதன் அண்டை நாடுகளுக்கும் பிராந்தியத்திற்கும் முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்த பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்றும், ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களுக்கு உதவுவதற்கும் நமது கூட்டுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்றும் நான் நம்புகிறேன்" என்றார்.

ஆப்கான்ஸ்தான் தொடர்பான தில்லி பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் உயர்மட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காபூலை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அதிகரித்துள்ள பயங்கரவாதம், தீவிரவாதம், போதை பொருள் கடத்தலை ஒருங்கிணைந்து எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்க இந்தியா இந்த மாநாட்டை நடத்திவருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com