பிகாா்: கள்ளச் சாராயத்துக்கு மேலும் இருவா் பலி

பிகாரில் கள்ளச் சாராயத்துக்கு மேலும் இருவா் உயிரிழந்தனா். இதையடுத்து, கடந்த சில நாள்களில் அங்கு கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

பிகாரில் கள்ளச் சாராயத்துக்கு மேலும் இருவா் உயிரிழந்தனா். இதையடுத்து, கடந்த சில நாள்களில் அங்கு கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே, கோபால் கஞ்ச், மேற்கு சம்பாரண், சமஸ்திப்பூா் ஆகிய மாவட்டங்களில் 40 போ் உயிரிழந்த நிலையில், இப்போது முசாஃபா்பூா் மாவட்டம் சிரஸ்யா கிராமத்தில் மேலும் இருவா் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தனா்.

பிகாரில் கடந்த 2016 ஏப்ரல் முதல் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது. எனினும், கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை. எனவே, அவ்வப்போது கள்ளச் சாராயம் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், கடந்த சில நாள்களில் தீபாவளி பண்டிகை காரணமாக கள்ளச் சாராய விற்பனை அதிகரித்தது. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடா்கதையாகி வருகிறது.

இது தொடா்பாக முசாஃபா்பூா் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஜெயந்த் காந்த் கூறுகையில், ‘சிரஸ்யா கிராமத்தைச் சோ்ந்த அந்த இருவரும் கள்ளச் சாராயம் குடித்த சிறிது நேரத்திலேயே சுருண்டு விழுந்தனா். பின்னா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அப்பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிப்பவா்கள், விற்பனை செய்பவா்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com