இதில் கூட உலகச் சாதனையா? 34 வயது பெண்ணுக்கு நேரிட்ட துயரம்
இதில் கூட உலகச் சாதனையா? 34 வயது பெண்ணுக்கு நேரிட்ட துயரம்

இதில் கூட உலகச் சாதனையா? 34 வயது பெண்ணுக்கு நேரிட்ட துயரம்

பெங்களூருவில் உள்ள சக்ரா உலக மருத்துவமனை, 34 வயது பெண்ணின் கருப்பையிலிருந்து 222 நீர்க்கட்டிகளை அகற்றி உலக சாதனை படைத்துள்ளது.


பெங்களூரு: பெங்களூருவில் உள்ள சக்ரா உலக மருத்துவமனை, 34 வயது பெண்ணின் கருப்பையிலிருந்து 222 நீர்க்கட்டிகளை அகற்றி உலக சாதனை படைத்துள்ளது.

2016ஆம் ஆண்டு எகிப்தில், ஒரு பெண்ணின் கருப்பையிலிருந்து 186 நீர்க்கட்டிகள் அகற்றப்பட்டதே, இதுவரை கின்னஸ் உலகச் சாதனையாக இருந்து வந்துள்ளது. தற்போது, இந்த சாதனை, பெங்களூரு மருத்துவமனையால் முறியடிக்கப்பட்டுள்ளது.

ரித்திகா ஆச்சார்யா, தொலைக்காட்சி முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளர், செய்தியாளர்.  கடந்த செப்டம்பர் மாதம் இவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அவர் மிகவும் ஊட்டச்சத்துக் குறைந்து, 2 ஆண்டுகளாக மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்னைகளோடு இருப்பதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

இது மட்டுமல்ல, அவரது வயிறு 8 மாத கர்ப்பிணி போல இருந்தது. என்னைப் பார்க்கும் பலரும், கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்பார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.  அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், கருப்பை நீர்க்கட்டிகளே பிரச்னை என்று தெரிய வந்தது.

இதையடுத்து, ரித்திகாவின் கருப்பையில் அறுவை சிகிச்சை மூலம் 2.5 கிலோ எடை கொண்ட 222 நீர்க்கட்டிகள் அகற்றப்பட்டன. இந்த அறுவை சிகிச்சை சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது.

இது பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னைதான், ஆனால் பலருக்கும் இதில் அறுவை சிகிச்சை தேவைப்படாது. ஆனால், இவருக்கு நீர்க்கட்டிகள் பெரிய அளவில் வளர்ந்து கிட்டத்தட்ட ஒரு காளிபிளவர் போல காணப்பட்டது. அவரது கருப்பை சுவர் முழுக்க நீர்க்கட்சிகளாக இருந்தன. அவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

இதனால் தான் அவர் சத்துக் குறைபாட்டுடன், தலைச்சுற்றலுடன் இருந்தார். நீர்க்கட்டிகள் காரணமாக மற்ற உடல் உறுப்புகளில் அழுத்தம், வயிறின் அளவு பெரிது போன்றவையும் ஏற்பட்டன. இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற தவறிவிட்டார். இது பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைதான் என்றார்.

கரோனா பேரிடர் காலம் என்பதால், மருத்துவமனைக்கு வர அச்சம் கொண்டு, சிகிச்சை பெறாமல் இருந்ததாகவும், என்னால் குனிந்து எந்த வேலையோ உடற்பயிற்சியோ கூட செய்யஇயலாது. மருத்துவரை நாட 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. நீர்க்கட்டிகள் அகற்றப்பட்டாலும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலிலிருந்து அவ்வளவு எளிதில் என்னால் வெளியே வரமுடியவில்லை. எனக்கு நடந்த அறுவை சிகிச்சை கின்னஸ் உலக சாதனை என்று கூறினார்கள். ஆனால் அது பற்றி என்னால் பெருமைப்பட்டுக்கொள்ள முடியவில்லை என்கிறார்.

இது பற்றி மருத்துவர் கூறுகையில், இது பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைதான். ஆனால் பலரும் பிரச்னை பெரிதான பிறகுதான் மருத்துவரை நாடுகிறார்கள் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com