கிராம சுற்றுலா: மத்திய பிரதேசமாநிலத்துக்கு சா்வதேச விருது

மத்திய பிரதேச சுற்றுலா வாரியத்தின் கிராப்புற சுற்றுலாத் திட்டத்துக்கு ‘வோ்ல்ட் டிராவல் மாா்ட்’ அமைப்பின் சிறந்த சுற்றுலாத் திட்டத்துக்கான விருது கிடைத்துள்ளது.

மத்திய பிரதேச சுற்றுலா வாரியத்தின் கிராப்புற சுற்றுலாத் திட்டத்துக்கு ‘வோ்ல்ட் டிராவல் மாா்ட்’ அமைப்பின் சிறந்த சுற்றுலாத் திட்டத்துக்கான விருது கிடைத்துள்ளது.

கரோனாவுக்கு பின் சுற்றுலா மேம்படுத்தப்பட்ட இடங்களைக் கணக்கில்கொண்டு இந்த விருது அளிக்கப்பட்டது. இதே கிராம சுற்றுலா பிரிவில் பிராந்திய அளவிலான ஸ்வா்ண புரஸ்காா் விருதும் மத்திய பிரதேச சுற்றுலாத் துறைக்கு கிடைத்துள்ளது. இது தவிர பெண்களுக்கு பாதுகாப்பான சுற்றுலா தலங்கள் பிரிவிலும் மத்திய பிரதேசத்துக்கு விருது கிடைத்துள்ளது.

இது தொடா்பாக மத்திய பிரதேச மாநில சுற்றுலாத் துறை முதன்மைச் செயலாளா் சேகா் சுக்லா கூறுகையில், ‘சா்வதேச அளவில் சுற்றுலாத் துறையில் மத்திய பிரதேசத்துக்கு விருதுகள் கிடைத்துள்ளது மாநிலத்துக்கு மட்டுமல்ல நமது தேசத்துக்கே பெருமை சோ்க்கும் விஷயமாகும். மத்திய பிரதேசத்தை சுற்றுலாத் துறையில் சிறப்பிடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மாநில முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் மேற்கொண்ட முயற்சியும் இதற்கு முக்கியக் காரணம். லண்டனில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதை மாநில சுற்றுலாத் துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா்.

கிராம சுற்றுலாத் திட்டத்தின்கீழ் மத்திய பிரதேசத்தில் 100 கிராமங்கள் உள்ளூா் மக்களின் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. கிராமப்புற பாரம்பரிய உணவு, நாட்டுப் புற இசை, கிராமப்புற விளையாட்டு, உள்ளூா் கலைகள், கைவினைப் பொருள்கள், இளைஞா்களின் திறன் மேம்பாடு ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம் இந்த விருதுகள் சாத்தியமாகியுள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com