உ.பி.யில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை குறிவைக்கும் பாஜக; வியூகம் அமைத்த அமித் ஷா

403 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளிடம் கட்சி பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா நேற்று உரையாற்றினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேசம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அமைப்பதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டிவருகின்றன.

இந்நிலையில், 403 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளிடம் கட்சி பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா நேற்று உரையாற்றினார்.

வாரணாசியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தலைவர் இதுகுறித்து கூறுகையில், "காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி இணைந்து வந்தாலும், பாஜகவை தோற்கடிக்க முடியாது என அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு, மாஃபியாவுக்கு எதிரான நடவடிக்கை, தொற்று நோய காலத்தில் சுகாதார சேவை நிர்வாகம் உள்ளிட்ட விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் அரசை ஷா பாராட்டினார்.

அடுத்தாண்டு உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முக்கியமானதாக இருக்கும். தில்லியில் வெற்றிக்கான பாதை, இந்த மாநிலத்தின் வழியாக செல்வதால், அனைவரின் பார்வையும் உத்தரப் பிரதேசத்தின் மீது தற்போது உள்ளது. 2017ஆம் ஆண்டு பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 325 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்றன. 

அதே போலவே, இந்த முறை மிகப்பெரிய வெற்றியை ஈட்ட கட்சி நிர்வாகிகள் கடினமாக உழைக்க வேண்டும் என ஷா கேட்டுக்கொண்டார்" என்றார்.

கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் பொறுப்புகளை வழங்க மாநில தலைவர்களிடம் ஷா அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பொறுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பணிகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மேலும் பேசிய கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த தலைவர், "காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகள் பலவீனமாக இருக்கிறது. மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலும் பாஜகவை தோற்கடிக்க முடியாது என ஷா தெரிவித்தார்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com