தொடரும் பெயர் மாற்றும் படலம்; ரயில் நிலையத்தின் பெயரை மாற்ற பாஜக அரசு பரிந்துரை

நாட்டில் முதல்முறையாக தனியார் நிறுவனம் மற்றும் அரசு இணைந்து கட்டிய ஹபீப்கஞ் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திங்கள்கிழமை திறந்து வைக்கவுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலில் உள்ள ஹபீப்கஞ் ரயில் நிலையத்திற்கு பழங்குடியினத்தை சேர்ந்த ராணி கமலாபாதியின் பெயரை வைக்க வேண்டும் என சிவராஜ் சிங் தலைமையிலான அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளது. 

நாட்டில் முதல்முறையாக தனியார் நிறுவனம் மற்றும் அரசு இணைந்து கட்டிய
ஹபீப்கஞ் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திங்கள்கிழமை திறந்து வைக்கவுள்ளார். 450 கோடி ரூபாய் செலவில் இந்த ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநில போக்குவரத்து துறை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில், "16ஆம் நூற்றாண்டில், கோண்டு இன மக்கள்தான் போபாலை ஆட்சி செய்துள்ளனர். எனவே, கோண்டு இன மக்களின் ராணியான கமலாபாதியை நினைவுகூரும் வகையில் ஹபீப்கஞ் ரயில் நிலையத்தை ராணி கமலாபாதி ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த ரயில் நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயரை வைக்க வேண்டும் என போபால் எம்பி பிரக்யா சிங் தாகூர், பிரபாத் ஜா, மத்தியப் பிரதேச முன்னாள் அமைச்சர் ஜைபான் சிங் பாவையா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். திங்கள்கிழமையன்று ரயில்நிலையத்தை திறக்கவுள்ள மோடி, போபாலில் நான்கு மணி நேரம் செலவிடவுள்ளார்.

ஜம்போரி மைதானம் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிகாக 23 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதில், 13 கோடி ரூபாய் இந்த நிகழ்ச்சியில் மக்களை அழைத்து வரும் வகையில் போக்குவரத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. 

இந்திய ரயில்வேயின் மறுமேம்பாட்டு திட்டத்தின் ஓர் அங்கமாக நாட்டில் முதல்முறையாக தனியார் நிறுவனமும் அரசும் இணைந்து புதுப்பித்த முதல் ரயில் நிலையம் ஹபீப்கஞ் ரயில் நிலையம் என ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com