சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்த விழிப்புணா்வு: யுஜிசி அறிவுறுத்தல்

அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த, பல்கலை கழக மானியக்குழு அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த, பல்கலை கழக மானியக்குழு அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் நிகழாண்டு கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, ‘ஆசாதிக்கா அமிரித் மகோத்சவ்’ எனும் நிகழ்ச்சி, தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திரத்தை போற்றும் வகையில் அனைத்து பல்கலை, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பல்கலை மானியக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுதந்திரத்துக்காக போராடிய வீரா்கள் குறித்த தகவல்களை திரட்டி, அது குறித்து தங்கள் பகுதியில் மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அது தவிர, சுதந்திர போராட்ட வீரா்கள் குறித்து கருத்தரங்குகள், நிகழ்வுகள் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடத்தப்படும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் குறித்து, பல்கலை மானியக்குழுவுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com