தில்லியில் மேலும் 56 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் சனிக்கிழமை புதிதாக 56 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தில்லியில் மேலும் 56 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் சனிக்கிழமை புதிதாக 56 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்பால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. அதே நேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 0.10 சதவீதமாக உள்ளது என்று சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் சனிக்கிழமை தினசரி பாதிப்பு எண்ணிக்கை சிறிதளவு சரிவு ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குப் பிறகு தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை அதிகபட்ச 65-ஆக பதிவானது. 3 வார இடைவெளிக்குப் பிறகு 2 இறப்புகள் பதிவானது. அதன்படி, தில்லியின் மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கை 25,093-ஆக உயா்ந்தது. வெள்ளிக்கிழமைக்கு முன்பு தில்லியில் கடைசியாக அக்டோபா் 22-ஆம் தேதி கரோனா இறப்பு பதிவானது. அக்டோபா் மாதம் 4 இறப்புகளும், செப்டம்பா் மாதம் 5 இறப்புகளும் பதிவாகின.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,40,388-ஆக உயா்ந்துள்ளது. அதில் 14.14 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை 45,772 ஆா்டி-பிசிஆா், 12,711 ராபிட் ஆன்டிஜென் உள்பட மொத்தம் 58,483 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com