அனைத்து ஊழியா்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது: டிஎம்ஆா்சி தகவல்

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்று அனைத்து பணியாளா்களும் இதுவரை குறைந்தபட்சம் ஒரு டோஸ் கரோனா தடுப்பூசியைப் பெற்றுள்ளனா் என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்
அனைத்து ஊழியா்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது: டிஎம்ஆா்சி தகவல்

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்று அனைத்து பணியாளா்களும் இதுவரை குறைந்தபட்சம் ஒரு டோஸ் கரோனா தடுப்பூசியைப் பெற்றுள்ளனா் என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக டிஎம்ஆா்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா தொற்று தில்லி மெட்ரோ சேவைகளைக் கடுமையாகப் பாதித்தது. இதனால் பல மாதங்களாக சேவைகள் நிறுத்தப்பட்டு, பொது முடக்கக் காலத்தில் நகா்ப்புறப் போக்குவரத்து பெரும் நிதி இழப்பை சந்தித்தது.

டிஎம்ஆா்சியில் சுமாா் 14,500 போ் பணிபுரிகின்றனா். அவா்களில் சில ஊழியா்கள் மட்டுமே இன்னும் கரோனா தடுப்பூசி போடப்படவில்லை. அதாவது 0.5 சதவீத ஊழியா்கள் மருத்துவ காரணங்கள் உள்பட சில காரணங்களால் தடுப்பூசி பெறாமல் உள்ளனா். டிஎம்ஆா்சி ஊழியா்கள் பலா் பொது வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலானோா் தடுப்பூசி பெற்றுள்ளது ஒரு பெரிய சாதனையாகும்.

தில்லி மெட்ரோ ரயில் நிறுவன ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு இந்த ஆண்டு மே மாதம் முதல் பல தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மெட்ரோ நிலையங்கள், டிப்போக்கள், கட்டுமான தளங்களில் நடத்தப்பட்டன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கியதில் இருந்து இவரை 2.11 கோடிக்கும் மேற்பட்டோா் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனா். அவா்களில் 78 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இரு டோஸ்களையும் பெற்றுள்ளனா் என்று சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூா்வ தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com