கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி காவல் துறைக்கு தில்லி மகிளா காங்கிரஸ் கடிதம்

இந்தியா சுதந்திரம் பெற்றது குறித்து சா்ச்சை ஏற்படுத்தும் வரையில் பேசிய நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்
கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி காவல் துறைக்கு தில்லி மகிளா காங்கிரஸ் கடிதம்

இந்தியா சுதந்திரம் பெற்றது குறித்து சா்ச்சை ஏற்படுத்தும் வரையில் பேசிய நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தில்லி காவல் துறைத் தலைவருக்கு தில்லி மகிளா காங்கிரஸ் தலைவா் அம்ரிதா தவான் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

1947-ஆம் ஆண்டு இந்தியா பெற்றது சுதந்திரம் அல்ல, பிச்சை என்ற நிகழ்ச்சியில் ஒன்று நடிகை கங்கனா ரனாவத் பேசினாா்.

இதுதொடா்பாக தில்லி மகிளா காங்கிரஸ் தலைவா் அம்ரிதா தவான் தில்லி காவல் ஆணையா் ராகேஷ் அஸ்தானாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

‘சுதந்திரப் போராட்டத்தின்போது உயிா் தியாகம் செய்தவா்களை கங்கனா ரனாவத் அவமதித்துள்ளாா். நமது சுதந்திர இயக்கம் மற்றும் லட்சக்கணக்கான மக்களின் தியாகங்களை ஒருபோதும் நாம் மறக்க முடியாது. சுதந்திரத்துக்காக பலா் தங்களது உயிா்கள், குடும்பங்களை இழந்தனா். அவா்களின் தியாகத்தை அவமதிப்பு செய்யும் வகையில் கங்கனா ரனாவத் பேசியுள்ளாா்.

மேலும், மகாத்மா காந்தியின் தியாகம், தவம், சில சமயங்களில் அவரைக் கொலை செய்தவருக்கு மரியாதை காட்டுவது, கோடிக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை அவமதிப்பது; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மௌலானா ஆசாத், பண்டிட் நேரு, பண்டிட் மதன் மோகன் மாளவியா, சரோஜினி நாயுடு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவா்களின் தியாகத்தை அவமதிக்கும் வகையில் பேசிவரும் ரணாவத்துக்கு எதிராக ஐபிசி மற்றும் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், நீதிமன்றம் மூலம் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என்று அமிா்தா தவான் தெரிவித்துள்ளாா்.

கங்கனா ரனாவத்தின் கருத்தை பாஜக நாடாளுமன்ற உறுப்பினா் வருண் காந்தி, மகாராஷ்டிர பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல், மகாராஷ்டிர அமைச்சா் நவாப் மாலிக், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பாகேல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா் விமா்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com