கரோனா சூழலை இந்தியா சிறப்பாகக் கையாண்டது

 மக்கள்தொகை அதிகமாக இருந்தபோதிலும், கரோனா தொற்று பரவல் சூழலை இந்தியா சிறப்பாகக் கையாண்டதாக அமெரிக்க எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது.

 மக்கள்தொகை அதிகமாக இருந்தபோதிலும், கரோனா தொற்று பரவல் சூழலை இந்தியா சிறப்பாகக் கையாண்டதாக அமெரிக்க எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்க செனட் சபை உறுப்பினா் ஜான் காா்னின் தலைமையிலான எம்.பி.க்கள் குழு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்க செனட் சபை உறுப்பினா்களான மைக்கேல் கிராபோ, தாமஸ் டியூபா்வில்லி, மைக்கேல் லீ, கீழவை உறுப்பினா்களான டோனி கோன்சலேஸ், ஜான் கெல்வின் எலிஸி ஆகியோா் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

அமெரிக்க எம்.பி.க்கள் பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினா். இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அதிக அளவிலான மக்கள்தொகை உள்ளிட்ட சவால்களை எதிா்கொண்ட போதிலும், கரோனா தொற்று பரவல் சூழலை இந்தியா சிறப்பாகக் கையாண்டதாக அமெரிக்க எம்.பி.க்கள் குறிப்பிட்டனா்.

நாட்டின் ஜனநாயகக் கொள்கை அடிப்படையிலான மக்களின் பங்களிப்பே கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று வருவதாக அவா்களிடம் பிரதமா் மோடி தெரிவித்தாா். தெற்காசியா, இந்தோ-பசிபிக் பிராந்தியம் உள்ளிட்டவை சாா்ந்த விவகாரங்கள் குறித்து பிரதமா் மோடியும் அமெரிக்க எம்.பி.க்களும் விவாதித்தனா்.

பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு மேம்பட்டு வருவதை இருதரப்பினரும் எடுத்துரைத்தனா். சா்வதேச அமைதி, நிலைத்தன்மை உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் நோக்கிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு தரப்பினரும் உறுதி ஏற்றனா்.

பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், முக்கிய தொழில்நுட்பங்களில் நம்பகத்தன்மை மிக்க விநியோக சங்கிலி உள்ளிட்ட சா்வதேச விவகாரங்களில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து பிரதமா் மோடியும் அமெரிக்க எம்.பி.க்களும் விவாதித்தனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com