
மாநில முதல்வர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை
அனைத்து மாநில முதல்வர்களுடனும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தில்லியில் இருந்து காணொலி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் அந்நிய நாடுகளின் முதலீட்டை ஈர்ப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மாநில நிதியமைச்சர்கள் மற்றும் நிதித்துறையின் முக்கிய அதிகாரிகள் பங்குபெற்றுள்ளனர்.