மேற்கு வங்க பேரவை: பிஎஸ்எஃப் அதிகார வரம்பு விரிவாக்கத்துக்கு எதிராக தீர்மானம்

எல்லைப் பாதுகாப்புப் படை அதிகார வரம்பு விரிவாக்கத்துக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மம்தா பானா்ஜி
மம்தா பானா்ஜி

எல்லைப் பாதுகாப்புப் படை அதிகார வரம்பு விரிவாக்கத்துக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சர்வதேச எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரவரம்பானது 15 கி.மீ. இருந்து 50 கி.மீ. ஆக அதிகரிக்கப்படுவதாக கடந்த அக்டோபர் 13ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்த அறிவிப்பிற்கு எதிராக எல்லையோர மாநிலங்களான பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள், மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த அறிவிப்பு மாநில சட்டங்கள், காவல்துறைக்கு இடையூறாக அமையும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மேற்கு வங்க சட்டப்பேரவையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நவம்பர் 22ஆம் தேதி தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com