கோவா தேர்தல்: திரிணாமுல் காங். முதல்வர் வேட்பாளராக லியாண்டர் பயஸ்?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ’கோவாவில் முதல்வரானால் மக்களுக்கு பொற்கால ஆட்சித் தருவேன்’ எனத் தெரிவித்திருக்கிறார். 

இதையும் படிக்க | திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்தாண்டு (2022) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போதிருந்தே அரசியல் கட்சிகள் கோவா தேர்தல் மீது கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவின் பிரபல முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணமுல் காங்கிரஸில் இணைந்தார்.

இதற்கடுத்து லியாண்டர் தற்போது கோவாவில் மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது செய்தியாளர்கள்ளிடம் ’ நம் நாட்டுக்காக 30 ஆண்டுகள் உழைத்துள்ளேன். இப்போது களம் மட்டுமே மாறியுள்ளது. முதல்வர் வாய்ப்பு கொடுத்தால் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலின் படி கோவா மக்களுக்கு பொற்கால ஆட்சித் தருவேன்’ எனத் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியால் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கோவாவில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com