கரோனா பொதுமுடக்கம் காற்று மாசைக் கட்டுப்படுத்தியதா?: உண்மை என்ன?

கரோனா காரணமாக நாட்டில் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவில்லை என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கரோனா காரணமாக நாட்டில் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவில்லை என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மோசமான துகள்கள் காற்றில் இருக்கும் அளவு குறைந்திருந்தாலும், வளிமண்டல ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மேலும் அதிகரிக்கவே செய்துள்ளது.

கனடாவைச் சேர்ந்த யோர்க் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வின் தரவுகள் அடிப்படையில், இந்தியாவில் கரோனா முதல் அலை பொதுமுடக்கத்தின் போது வாகனங்கள் இயக்கம் பெருமளவு குறைந்து இருந்ததால், காற்றின் தரம் சற்று மேம்பட்டிருந்தது.

காற்று மிகவும் சுத்தமானதாக இருந்தது. ஆனால் இதுவே சூரியக் கதிர்கள் பூமியில் நேரடியாக நுழைவதற்கு வழிகோலாய் அமைந்துள்ளது. இதனால் பூமியைச் சுற்றியுள்ள ஓசோன் படலத்தின் பாதிப்பு 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று ஆய்வின் தரவுகள் தெரிவிக்கின்றன.

காற்று மாசு காரணமாக பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் நோய் பாதிப்புற்குள்ளாகின்றனர். இந்தியாவில் இது மோசமான நிலையை எட்டியிருக்கிறது. காற்று மாசு காரணமாக பல்வேறு மக்கள் நோய் பாதிப்புற்குள்ளாகின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. 

காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் மையங்களில் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com