சோதனை என்ற பெயரில் பெண்களிடம் அத்துமீறுவதாகக் குற்றச்சாட்டு: பிஎஸ்எஃப் மறுப்பு

மேற்கு வங்கத்தில் சோதனை என்ற பெயரில் எல்லைப் பாதுகாப்புப் படையினா்(பிஎஸ்எஃப்) பெண்களிடம் அத்துமீறுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கூறிய குற்றச்சாட்டுக்கு பிஎஸ்எஃப் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் சோதனை என்ற பெயரில் எல்லைப் பாதுகாப்புப் படையினா்(பிஎஸ்எஃப்) பெண்களிடம் அத்துமீறுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கூறிய குற்றச்சாட்டுக்கு பிஎஸ்எஃப் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா- வங்கதேசம் இடையேயான 4,096 கி.மீ. தொலைவில் பிஎஸ்எஃப் படையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோன்று வடக்கு எல்லையிலும் மேற்கு எல்லையிலும் பிஎஸ்எஃப் படையினா் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

அண்மையில், பிஎஸ்எஃப் படையினரின் கண்காணிப்பு எல்லையை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கு மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் பிஎஸ்எஃப் எல்லை விரிவாக்கத்துக்கு எதிராக மேற்கு வங்க சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ உதயன் குகா கூறியதாவது:

பிஎஸ்எஃப் படையினா் சோதனை என்ற பெயரில் மக்களைக் கொடுமைப்படுத்துகிறாா்கள். ஒரு குழந்தை தனது தாயாரிடம் சோதனை செய்வதாகக் கூறி பிஸ்எஃப் படையினா் தொந்தரவு செய்ததைப் பாா்த்துள்ளது. அந்தக் குழந்தையின் முன்னால் நின்று பாரத மாதா வாழ்க என்ற எத்தனை முறை முழக்கமிட்டாலும், அக்குழந்தைக்கு ஒருபோதும் தேசப்பற்றாளராக உருவாகாது. இதுபோன்ற சம்பவங்கள் சமூக விரோதிகளை உருவாக்குகின்றன என்றாா் அவா்.

திரிணமூல் எம்எல்ஏவின் குற்றச்சாட்டுக்கு பிஎஸ்எஃப் மூத்த அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘பிஎஸ்எஃப் படையினா் முறையாகப் பயிற்சி பெற்றவா்கள். அவா்கள் விதிகளுக்கு உள்பட்டு நடப்பவா்கள். பெண்களிடம் பிஎஸ்எஃப் பிரிவில் உள்ள பெண் வீரா்களே சோதனை செய்வாா்கள். எனவே, எம்எல்ஏவின் குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது’ என்றாா்.

இந்த குற்றச்சாட்டு தொடா்பாக, கொல்கத்தாவிலும் சிலிகுரியிலும் உள்ள பிஎஸ்எஃப் தலைமை அலுவலகங்கள் விரிவான விளக்கம் அளிக்கலாம் என்று மற்றொரு உயரதிகாரி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com