மோடி தேர்தல் தோல்வியை உணரத் தொடங்கியிருக்கிறார்: பிரியங்கா காந்தி

வேளாண் சட்டத்தை ரத்து செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி மோடியை விமர்சித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

வேளாண் சட்டத்தை ரத்து செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி மோடியை விமர்சித்திருக்கிறார்.

வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம்  நடைபெற்று வந்த நிலையில் இன்று பிரதமர் மோடி அதை ரத்து செய்வதாக அறிவித்தார்.

அதனை வரவேற்கும் விதமாக பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் பிரியங்கா காந்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் , ‘ இதுவரை போராட்டத்தில் 600 விவசாயிகள் பலியாகியிருக்கிறார்கள். 300 நாட்களுக்கு மேல் போராட்டம் நடைபெற்று வருகிறது. நீங்கள்(மோடி) கண்டுகொள்ளவில்லை.  சட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை உங்கள் கட்சினர் (பாஜக) தீவிரவாதிகள் , தேசத் துரோகிகள் , அடியாட்கள் என குற்றச் சாட்டினர். அவர்களை ஆயுதங்களால் தாக்கினார்கள். தற்போது விவசாயிகளின் எழுச்சியால் தேர்தலில் தோற்றுவிடுவோம் என உணர்ந்ததும் திடீரென எதார்த்தத்தைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். விவசாயிகளை எதிர்த்து எந்த அரசாலும் செயல்பட முடியாது’ எனத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com