மருத்துவமனையிலிருந்து 202 நாள்களுக்குப் பிறகு வீடு திரும்பிய கரோனா நோயாளி

கடந்த மே மாதம் 1ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்ட 45 வயது பெண்மணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 202 நாள்களுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவமனையிலிருந்து 202 நாள்களுக்குப் பிறகு வீடு திரும்பிய கரோனா நோயாளி
மருத்துவமனையிலிருந்து 202 நாள்களுக்குப் பிறகு வீடு திரும்பிய கரோனா நோயாளி


தாஹோத்: கடந்த மே மாதம் 1ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்ட 45 வயது பெண்மணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 202 நாள்களுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.

குஜராத் மாநிலம் தாஹோத் நகரில், சிகிச்சையின் பலனாக உடல் நலம் தேறிய நிலையில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கீதா தார்மிக், ரயில்வே ஊழியரின் மனைவியான கீதா, நாட்டில் கரோனா இரண்டாம் அலை உச்சத்திலிருந்தபோது, போலிலிருந்து ரயிலில் பயணித்த சில நாள்களில் கரோனா பாதிப்புக்கு உள்ளானார்.

மே 1ஆம் தேதி அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, பிறகு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, தாஹோத் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய நாள் முதல் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 202 நாள்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த கீதா தார்மிக்கின் உடல்நிலை தற்போது முன்னேற்றமடைந்த நிலையில், அவரை வீட்டுக்கு அனுப்ப மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

வெள்ளிக்கிழமையன்று அவர் வீடு திரும்பிய நிலையில், அதனை அவரது குடும்பத்தினர் ஒரு விழாவைப் போல கொண்டாடினர். 

கடந்த 202 நாள்களில் பல நாள்கள் அவர் வென்டிலேட்டர் மற்றும் ஆக்ஸிஜன் உதவியோடு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஒன்பது முறை அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. அப்போதெல்லாம் அவர் பிழைப்பார் என்ற நம்பிக்கையையே நான் இழந்துவிட்டிருந்தேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் போராடி மீண்டெழுந்து இன்று வீடு திரும்பிவிட்டார்.

ஏப்ரல் 23ஆம் தேதி தனது மாமனார் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதால், போபால் சென்றுவிட்டு, ஏப்ரல் 25ல் வீடு திரும்பினோம். அது முதல் அவருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டன். மே 1ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது ஆக்ஸிஜன் அளவு குறைந்து, காய்ச்சல் அதிகரித்ததால் மருத்துவமனையில் அனுமதித்தோம். அவர் சுமார் 2 மாதங்கள் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது ஒன்பது முறை மருத்துவர்கள் அவரது நிலைமை மோசமாக உள்ளதாகக் கூறிவிட்டார். ஒரு முறை அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறிவிட்டார்கள். ஆனால் எல்லாவற்றையும் கடந்து அவர் மருந்துகள் மூலமாகவே குணமடைந்து இன்று மீண்டும் வீடு திரும்பிவிட்டார். அவருக்கு வீட்டிலும் ஆக்ஸிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்றபடி அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com