திரிபுராவில் திரிணமூல் தலைவர் கைது: தில்லியில் எம்.பி.க்கள் போராட்டம்

திரிபுரா காவல்துறையினர் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது அத்துமீறுவதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வெளியே திரிணமூல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தில்லியில் எம்.பி.க்கள் போராட்டம்
தில்லியில் எம்.பி.க்கள் போராட்டம்

திரிபுரா காவல்துறையினர் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது அத்துமீறுவதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வெளியே திரிணமூல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திரிணமூல் காங்கிரஸின் திரிபுரா இளைஞரணி செயலாளர் சயானி கோஷை கொலை மிரட்டல் வழக்கில் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இதனை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரிணமூல் தொண்டர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காவல்துறையின் அத்துமீறல் குறித்து முறையிடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாபை சந்திக்க திரிணமூல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று தில்லி சென்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் நேரம் ஒதுக்காததால், உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்திற்கு வெளியே அமர்ந்து எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திரிபுராவில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 334 இடங்களில் நடைபெற்ற தோ்தலில் 112 இடங்களை பாஜக வென்றது. எஞ்சிய 222 இடங்களுக்கு நவ.25-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.

தோ்தலையொட்டி அகா்தலாவில் பாஜக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் மாநில முதல்வா் விப்லப் குமாா் தேவ் பங்கேற்றிருந்தாா். அங்கு வந்த திரிணமூல் காங்கிரஸின் இளைஞரணி செயலா் சயானி கோஷ் கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் விப்லப் குமாா் தேவுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அவருடன் இருந்த சிலா் கூட்டத்தை நோக்கி கற்களை வீசியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதுதொடா்பாக பாஜக தொண்டா் அளித்த புகாரின் அடிப்படையில், சயானி கோஷ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 307 (கொலை முயற்சி), 153ஏ (இரு பிரிவினா் இடையே மோதலை தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இதையடுத்து அவா் விசாரணைக்கு அழைக்கப்பட்டாா். அவா் விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பின்னா் அவா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com