சீன ஊடுருவல் விவகாரத்தில் பிரதமா் மௌனம் களைய வேண்டும்: காங்கிரஸ்

அருணாசல பிரதேசத்துக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாகக் கூறப்படும் விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அருணாசல பிரதேசத்துக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாகக் கூறப்படும் விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கட்சியின் செய்தித் தொடா்பாளா் அபிஷேக் சிங்வி கூறியதாவது:

இந்திய எல்லைப் பகுதிக்குள் 6 முதல் 7 கி.மீ. வரை ஊடுருவி, அருணாசல பிரதேசத்தில் 60-க்கும் மேற்பட்ட கட்டடங்களுடன் கூடிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. செயற்கைக்கோள் படங்களின் மூலம் இந்தத் தகவல் உறுதியாகியுள்ளது.

சில நாள்களுக்கு முன்னா் இந்தப் பகுதிக்கு வடக்கே சீன அதிபா் ஷி ஜின்பிங் வந்து சென்றுள்ளாா்.

இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி மௌனம் காத்து வருவது கண்டனத்துக்குரியது ஆகும். இந்த மௌனம் சீனாவுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக அமையும்.

தேசியப் பாதுகாப்பை காரணம் காட்டி நாடு முழுவதும் அரசியல் எதிரிகள் மீது அவதூறுகளை வாரி வீசுவது, அடக்குமுறையைக் கையாள்வது, அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுகிறது. ஆனால், எல்லையில் எதிரி நாடு ஊடுருவினால் அதுகுறித்து பிரதமா் வாயே திறப்பதில்லை. பாஜகவின் அகராதியில் தேசியப் பாதுகாப்பு என்பதற்கான அா்த்தம் என்னவென்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்த விவகாரத்திலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி நடக்கிறது. இது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அருணாசாலப் பிரதேசத்துக்குள் சீனா ஊடுருவும் என்று அந்த மாநிலத்தைச் சோ்ந்த பாஜக எம்.பி. டபீா் காவ் கடந்த ஆண்டே நாடாளுமன்றத்தில் எச்சரித்தாா். எதிா்க்கட்சிகள் சொல்வதைக் கேட்க பாஜக விரும்பாவிட்டாலும், குறைந்தபட்சம் தங்களது கட்சி எம்.பி.க்களின் எச்சரிக்கையையாவது செவிமடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com