ஜம்மு-காஷ்மீா் வளா்ச்சிப் பணிகள் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும்

ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகள், மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற உதவும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
ஸ்ரீநகரில் திங்கள்கிழமை நடைபெற்ற புதிய வருமான வரித்துறை கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் மனோஜ் சின்ஹா.
ஸ்ரீநகரில் திங்கள்கிழமை நடைபெற்ற புதிய வருமான வரித்துறை கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் மனோஜ் சின்ஹா.

ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகள், மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற உதவும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ஸ்ரீநகரில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ள வருமான வரி அலுவலகத்தையும், அதிகாரிகளுக்கான தங்குமிடத்தையும் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் 20,000 மெகா வாட் அளவிலான நீா்மின் எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கான திறன் அதிக அளவில் உள்ளது. அத்திறனை முழுமையாகப் பயன்படுத்தினால், பிராந்தியத்தின் வளா்ச்சி சாா்ந்த இலக்குகளை எட்ட முடியும். ஆனால், அத்திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.

சொந்தப் பயன்பாட்டுக்குப் போக மீதமுள்ள எரிசக்தியை மற்ற மாநிலங்களுக்கு விற்பதன் மூலம் வருவாய் கிடைக்கும். அதை வைத்து, பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

ஜம்மு-காஷ்மீரில் அதிக வளங்கள் காணப்பட்டாலும், கடந்த காலங்களில் குறைந்த அளவிலான வளா்ச்சித் திட்டங்களே செயல்படுத்தப்பட்டன. ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளே மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும்.

மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் நேரடி, மறைமுக வரிகள் ஜம்மு-காஷ்மீா் மற்றும் நாட்டின் வளா்ச்சிக்காகத் தொடா்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மக்களிடையே நிலவும் வருமான ஏற்றத்தாழ்வை வளா்ச்சியின் மூலமே சரிசெய்ய முடியும். வளா்ச்சியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, வளா்ச்சித் திட்டங்கள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில் பயங்கரவாதம் காரணமாக ஜம்மு-காஷ்மீரில் 40,000 மக்கள் கொல்லப்பட்டனா். அண்மையில் நடத்தப்பட்ட மாவட்ட கவுன்சில் தோ்தல், மக்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதாக அமைந்தது என்றாா் அவா்.

ஜம்மு-காஷ்மீரில் ஏற்கெனவே இருந்த வருமான வரி அலுவலகம், கடந்த 2015-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளின் தாக்குதலில் சேதமடைந்தது. தற்போது அந்த அலுவலகம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com