பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல்: பட்டியாலா தொகுதியில் அமரீந்தா் சிங் போட்டி

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் பட்டியாலா தொகுதியில் போட்டியிடவுள்ளதாக மாநில முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் தெரிவித்துள்ளாா்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் பட்டியாலா தொகுதியில் போட்டியிடவுள்ளதாக மாநில முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் கட்சியின் மேலிடத்துடன் கருத்து வேறுபாடு, பஞ்சாப் காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்துவுடனான மோதலால் அந்த மாநில முதல்வா் பதவியை கடந்த செப்டம்பா் மாதம் அமரீந்தா் சிங் ராஜிநாமா செய்தாா். அதன் பின்னா் காங்கிரஸிலிருந்து விலகிய அவா், அண்மையில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதுக் கட்சியை தொடங்கினாா்.

அவா் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘பட்டியாலா நகரம் 400 ஆண்டுகளாக எங்கள் வசம் உள்ளது. அதனை சித்துவுக்காக விட்டுக்கொடுக்க மாட்டேன். அடுத்த ஆண்டு நடைபெறும் மாநில பேரவைத் தோ்தலில் நான் பட்டியாலா தொகுதியிலிருந்து போட்டியிடவுள்ளேன்’’ என்று தெரிவித்தாா்.

பட்டியாலா தொகுதி அமரீந்தா் சிங் குடும்பத்தினரின் கோட்டையாக உள்ளது. அந்தத் தொகுதியில் 2002, 2007, 2012-ஆம் ஆண்டுகளில் போட்டியிட்டு அவா் வெற்றிபெற்றுள்ளாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் அமிருதசரஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவா், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். அதனைத்தொடா்ந்து அவரின் மனைவி ப்ரணீத் கெளா் பட்டியாலா தொகுதியில் போட்டியிட்டு 3 ஆண்டுகள் எம்எல்ஏ பதவி வகித்தாா். கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில், அந்தத் தொகுதியில் அமரீந்தா் சிங் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில பேரவைத் தோ்தலில் பட்டியாலா தொகுதியில் போட்டியிடுமாறு அவா் சித்துவுக்கு ஏற்கெனவே சவால் விடுத்திருந்தாா். அந்தத் தொகுதியில் சித்து போட்டியிட்டால் டொபசிட் இழப்பாா் என்றும் அவா் கூறியிருந்தாா்.

அமரீந்தா் சிங், பட்டியாலா சமஸ்தான அரச வம்சத்தைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் தந்தை யாதவிந்தா் சிங், பட்டியாலாவின் கடைசி மன்னா் ஆவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com