மீன் வளத் துறை ஏற்றுமதி இலக்கு ரூ.1 லட்சம் கோடி: மத்திய அமைச்சா் தகவல்

வளா்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் மீன் வளத் துறையில் ஏராளமாக உள்ளதாகவும் 2024-25-ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி

வளா்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் மீன் வளத் துறையில் ஏராளமாக உள்ளதாகவும் 2024-25-ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை இத்துறை எட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா கூறினாா்.

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக மீன்வள தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் ரூபாலா, ‘மாநிலங்கள் ஒன்றுக்கொன்று ஊக்கம் பெற்று கடல்சாா் துறையின் வளா்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும். விவசாயிகள் கடன் அட்டை குறித்த விழிப்புணா்வு பெரிய அளவில் உருவாக வேண்டும். கடல்சாா் துறைக்கான அனைத்து ஆதரவையும் பிரதமா் நரேந்திர மோடி வழங்கி வருகிறாா். விவசாய கடன் அட்டை மீனவா்களுக்காக ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விழிப்புணா்வை பெரிய அளவில் உருவாக்குவதற்கான மாபெரும் பிரசாரம் ஒன்றை அரசு விரைவில் தொடங்கும்’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் இணை அமைச்சா் எல்.முருகன் பேசியதாவது: மீன்வளத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை பிரதமா் நரேந்திர மோடி உருவாக்கியதிலிருந்து குறுகிய காலத்திற்குள் இத்துறை மேம்படுத்தப்பட்டு, ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்ஸ்ய சம்பதா யோஜனா எனும் திட்டத்தின் வாயிலாக மீன்வளத் துறைக்கு ரூ.20,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடற்பாசி விவசாயத்தின் மீதும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. மீனவ சமுதாயத்தை சோ்ந்த பெண்களுக்கு அதிகாரமளித்து இத்துறையில் தொழில்முனைதலை ஊக்குவிப்பதிலும் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com