
கோப்புப்படம்
சீக்கிய சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக ஊடகப் பதிவில் பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை காவல் துறை செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு (டிஎஸ்ஜிஎம்சி) அளித்த புகாரின்பேரில் கங்கனா ரணாவத்துக்கு எதிராக சபர்பன் கர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. பிரிவு 295ஏ-வின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரி தெரிவித்தார்.
இதையும் படிக்க | பாஜகவின் ஆட்டங்கள் அம்பலமாகிவிட்டன: லாலு பிரசாத் யாதவ் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்
சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மன்ஜிந்தர் சிங் டிஎஸ்ஜிஎம்சி அமைப்பின் தலைவராகவும் உள்ளார். அவரது தலைமையிலான குழு, காவல் துறையிடம் புகார் அளித்தவுடன், மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலிப் பாட்டீல் மற்றும் மும்பை காவல் துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து கங்கனாவுக்கு எதிராக நடவடக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.