நொய்டா சர்வதேச விமான நிலையம்: நவ. 25-ல் அடிக்கல் நாட்டுகிறார் மோடி

நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம்  வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

கொளதம் புத்தா நகரில் நவம்பர் 25ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதன்மூலம், நாட்டில் 5 சர்வதேச விமான நிலையம் கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் உருவெடுக்கவுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் குஷிநகர் சர்வதேச விமான நிலையம், அயோத்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

தில்லி புறநகர் பகுதிக்குள் கட்டப்படும் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் நொய்டா விமான நிலையம் ஆகும். இதன்மூலம் காசியாபாத், அலிகர், ஆக்ரா, ஃபரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயணடைவர்.

மேலும், பல்வேறு முக்கிய நெடுஞ்சாலைகளும், மெட்ரோ ரயில் நிலையங்களும் இந்த விமான நிலையத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் 2024ஆம் ஆண்டிற்குள் நிறைவுபெறும்.

சுமார் 1,300 ஹெக்டார் பரப்பளவில் முதல்கட்டப் பணிகளுக்காக ரூ.10.050 கோடி நடைபெறும். முதல்கட்டப் பணிகள் முடிவடைந்து ஆண்டிற்கு 1.2 கோடி மக்களுக்கு சேவை அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com