நாட்டில் 543 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைந்த கரோனா பாதிப்பு

நாட்டில் சுமார் 543 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைந்த கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 7,579 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் 543 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைந்த கரோனா பாதிப்பு
நாட்டில் 543 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைந்த கரோனா பாதிப்பு


புது தில்லி: நாட்டில் சுமார் 543 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைந்த கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 7,579 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,579 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 236 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 7,579
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,45,26,480
நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.32​​​​​​​% என்றளவில் உள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 236. 
கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,66,147.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,13,584. இது கடந்த 2020, மார்ச் மாதத்துக்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகும். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.33 சதவிகிதமாக குறைந்துள்ளது.

தினசரி கரோனா உறுதியாகும் விகிதம் 0.79% ஆக உள்ளது. இது கடந்த 50 நாள்களுக்கும் மேலாக 2 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.

வாராந்திர கரோனா உறுதியாகும் விகிதம் 0.93% ஆக உள்ளது. இத கடந்த 60 நாள்களாக 2% சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.

கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் என்பது கரோனா பரிசோதனை செய்யும் 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்று உறுதியாகும் விகிதமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com