கோப்புப்படம்
கோப்புப்படம்

27 ஆண்டுகளுக்குப் பின்.. தனது முகவரியைக் கண்டடைந்த ஆறு

கர்நாடக மாநிலத்தில் துமக்குரு பகுதியில் 27 ஆண்டுகளுக்கு முன் மாயமான ஜெயமங்கலி ஆறு, தனது முகவரியை மீண்டும் கண்டடைந்துள்ளது. 

துமக்குரு: கர்நாடக மாநிலத்தில் துமக்குரு பகுதியில் 27 ஆண்டுகளுக்கு முன் மாயமான ஜெயமங்கலி ஆறு, தனது முகவரியை மீண்டும் கண்டடைந்துள்ளது. 

இதற்குக் காரணமாக அமைந்த, கடந்த சில வாரங்களாக கர்நாடகத்தில் பெய்த பெருமழைக்கு நன்றி சொல்லிக் கொண்டே சீறிப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது ஜெயமங்கலி ஆறு.

கோடைக்காலத்தில் நீரின்றி வறண்டுகிடந்த ஆறுகளையும் ஏரிகளையும் குளங்களையும் நிலப்பரப்புகளாக மாற்றி குடியிருப்புப் பகுதிகளாக மாற்றிவிடுகிறோம். பிறகு, மழைக்காலம் வந்ததும், குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்துவிட்டதாக மழை மற்றும் வெள்ளத்தின் மீது குற்றம்சுமத்துகிறோம். இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு மீம் அவ்வப்போது வெளியாகும்.. வீடுகளைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கும் வெள்ளம், அது தனது நீர்நிலையை தேடி அலைவதாகச் சொல்லும் வகையில் அமைந்திருக்கும்.

இதையும் படிக்கலாமே.. வாகனங்களின் பிஎச் பதிவு: மாநிலங்களுக்கு மற்றொரு நிதி இழப்பு ஆபத்து?

அது ஒரு மீமாக இருந்தாலும், மறைக்கவோ மறுக்கவோ முடியாத முற்றிலுமான உண்மை.

இந்த வகையில், சுமார் 27 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு போயிருந்த துமக்குரு ஆற்றில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தடுப்பணைகளைத் தாண்டி ஆர்ப்பரித்துக் கொண்டும் வெள்ள நீரைக் காண அப்பகுதிகளில் நாள்தோறும் ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள்.

அந்த ஆறு கடந்து வரும் பகுதிகளைச் சேர்ந்த வயதான மக்கள், தங்களது இளமைப் பருவத்தில், இந்த ஆறு ஓடிக் கொண்டிருந்தது நினைவிருப்பதாகவும், ஆனால் அப்போது கூட இந்த அளவுக்கு அதில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொண்டு சென்றதை பார்த்ததில்லை என்று தங்களது நினைவலைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த ஆற்றங்கரையோரம் எந்த விவசாயப் பகுதியோ, வனப்பகுதியோ இல்லை. அதுமட்டுமல்ல, இந்த ஆறு ஓடும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான கட்டுமானங்களால் நிலத்தடி நீர்மட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இது விரைவில் வறண்டு போய் விடுமோ என்றும் மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com