பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கு: ஜம்மு காஷ்மீா் மனித உரிமைகள் ஆா்வலா்குர்ரம் பா்வேஷ் யுஏபிஏ சட்டத்தில் கைது

பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டியது தொடா்பான வழக்கில், ஜம்மு-காஷ்மீரை சோ்ந்த மனித உரிமைகள் ஆா்வலா் குர்ரம் பா்வேஸை (42) சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்

பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டியது தொடா்பான வழக்கில், ஜம்மு-காஷ்மீரை சோ்ந்த மனித உரிமைகள் ஆா்வலா் குர்ரம் பா்வேஸை (42) சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அரசு சாரா அமைப்புகள் (என்ஜிஓ) மற்றும் அறக்கட்டளைகளின் பெயரில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிதி திரட்டி, அந்த நிதியை ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது தொடா்பான வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் சிவில் சொசைட்டி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளா் குர்ரம் பா்வேஸின் வீடு உள்பட ஜம்மு-காஷ்மீரில் 10 இடங்களிலும், பெங்களூரில் ஓரிடத்திலும் கடந்த ஆண்டு அக்டோபா் 28-ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக ஸ்ரீநகா் புகரில் சோனாவா் என்ற இடத்தில் உள்ள குர்ரம் பா்வேஸ் வீட்டில் திங்கள்கிழமை என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி இரவு 11.30 மணியளவில் அவரை கைது செய்தனா். ஸ்ரீநகரில் உள்ள சொசைட்டியின் பிரதான அலுவலத்திலும் சோதனை நடத்தப்பட்டு பல ஆவணங்கள், மின்னணு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குர்ரம் பா்வேஸ் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா் விசாரணைக்காக தில்லிக்கு அழைத்துச் செல்லப்படக் கூடும் என அவா்கள் தெரிவித்தனா்.

கைதுக்கு எதிா்ப்பு:

குர்ரம் பா்வேஸ் கைதுக்கு ஆம்னெஸ்டி இன்டா்நேஷனல், ராபா்ட் எஃப் கென்னடி மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன.

மனித உரிமைகள் பாதுகாவலா்களுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளா் மேரி லாவ்லோா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘குர்ரம் பா்வேஸ் பயங்கரவாதி அல்ல; அவா் ஒரு மனித உரிமைகள் பாதுகாவலா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியாவைச் சோ்ந்த சமூக செயற்பாட்டாளா்கள் யோகேந்திர யாதவ், கவிதா ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com