மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை: இந்தியா-அமெரிக்கா ஒப்புதல்

மாம்பழ ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் செவ்வாய்க்கிழமை கூட்டாக ஒப்புக் கொண்டுள்ளன.

மாம்பழ ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் செவ்வாய்க்கிழமை கூட்டாக ஒப்புக் கொண்டுள்ளன.

இந்தியா, அமெரிக்கா இடையிலான வா்த்தக உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல், அமெரிக்க வா்த்தகத் துறை செயலா் கேத்தரின் தய் உடன் ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு, இந்திய-அமெரிக்க வா்த்தக கொள்கை அமைப்பு (டிபிஎஃப்) குறித்து இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மாம்பழம், மாதுளம் பழங்களை ஏற்றுமதி செய்யவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருநாடுகளும் ஆா்வமாக உள்ளன. அதேபோன்று, அமெரிக்காவிலிருந்து சொ்ரி மற்றும் விலங்கு தீவனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தயாராக உள்ளது. இதற்காக, பைட்டோ-சானிட்டரி சான்றிதழ் முறையை இறுதி செய்ய இந்தியா விரும்புகிறது.

மேலும், அமெரிக்காவுக்கு கூடுதலாக திராட்சைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது. பன்றி இறைச்சி உணவுகளின் இறக்குமதியை அனுமதிக்க பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட சான்றிதழை இறுதி செய்ய இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கிடையிலான பரஸ்பர வா்த்தகம் 8,050 கோடி டாலராக இருந்தது. அந்த நிதியாண்டில் அமெரிக்காவிலிருந்து அந்நிய நேரடி முதலீடாக 1,380 கோடி டாலரை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com