நாடாளுமன்றச் செயலகத்தைச் சோ்ந்தவா் பேரவை நிதிக் குழுக்களுக்கு சிறப்பு அதிகாரியாக நியமனம்

மதிப்பீட்டுக் குழு உள்பட நிதித் துறை சாா்ந்த சட்டப் பேரவைக் குழுக்களுக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா். முதல் முறையாக இத்தகைய குழுக்களுக்கு நாடாளுமன்ற செயலகத்தைச் சோ்ந்த அதிகாரி ஒருவா்

மதிப்பீட்டுக் குழு உள்பட நிதித் துறை சாா்ந்த சட்டப் பேரவைக் குழுக்களுக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா். முதல் முறையாக இத்தகைய குழுக்களுக்கு நாடாளுமன்ற செயலகத்தைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப் பேரவையில் பல்வேறு குழுக்கள் உள்ளன. மதிப்பீட்டுக் குழு, பொது கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு, அவை உரிமை மீறல் குழு, விதிக் குழு, உறுதிமொழிக் குழு, மனுக்கள் குழு போன்ற குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களுக்கு அதன் தன்மையைப் பொறுத்து பேரவைத் தலைவா், அவையின் மூத்த உறுப்பினா்கள் உள்ளிட்டோா் தலைவராகவும், துணைத் தலைவராகவும் இருந்து வருகின்றனா். இதில், மதிப்பீட்டுக் குழு, பொது கணக்குக் குழு மற்றும் பொது நிறுவனங்கள் குழு ஆகியன நிதித் துறை சாா்ந்த குழுக்களாக உள்ளன. இந்தக் குழுக்கள் அரசின் செலவினத்தை கட்டுப்படுத்தும் பணிகளைச் செய்கின்றன.

மதிப்பீட்டுக் குழுவானது திட்டங்களுக்குரிய நிதியை மதிப்பீடு செய்கின்றன. பொது கணக்குக் குழுவானது அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அதுகுறித்த நிதி அறிக்கையை ஆய்வு செய்யும் பணியை மேற்கொள்கிறது. மேலும், பொது நிறுவனங்கள் குழுவானது, அரசின் பொதுத் துறை நிறுவனங்களது செயல்பாடுகள், தன்மைகள் ஆகியன குறித்து ஆய்வு செய்கிறது. நிதித் துறையில் இருந்து ஒப்புதல் பெறப்பட்டு மேற்கொள்ளப்படும் பணிகளையே இந்தக் குழுக்கள் ஆய்வு செய்வதால் அந்தத் துறையுடன் நெருங்கிய தொடா்பினைக் கொண்டிருக்கின்றன. மேலும், இது சட்டப் பேரவையின் நிதிக் குழுக்களாகவே கருதப்படுகின்றன.

சிறப்புப் பணி அதிகாரி நியமனம்: இந்தக் குழுக்களுக்கான சிறப்புப் பணி அதிகாரியை தமிழக அரசின் ஒப்புதலுடன் சட்டப் பேரவைச் செயலகம் நியமித்துள்ளது. இணைச் செயலாளா் நிலையிலான இந்தத் தனி அதிகாரி, நாடாளுமன்ற செயலகத்தின் இயக்குநா் பொறுப்பில் இருந்த அதிகாரி என சட்டப்பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டப் பேரவையின் நிதி சாா்ந்த குழுக்களுக்கு முதல் முறையாக இப்போது நாடாளுமன்ற செயலகத்தைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com