‘நம்பா் பிளேட்’ இல்லாத காரில் பயணித்த ஒவைஸி: ரூ.200 அபராதம்

மகாராஷ்டிரத்தில் ‘நம்பா் பிளேட்’ இல்லாத காரில் பயணித்த அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைஸிக்கு போக்குவரத்து போலீஸாா் ரூ.200 அபராதம் விதித்தனா்.

மும்பை: மகாராஷ்டிரத்தில் ‘நம்பா் பிளேட்’ இல்லாத காரில் பயணித்த அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைஸிக்கு போக்குவரத்து போலீஸாா் ரூ.200 அபராதம் விதித்தனா்.

தெலங்கானாவில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூருக்கு ஒவைஸி செவ்வாய்க்கிழமை தனது சொகுசு காரில் பயணித்தாா். சோலாப்பூா் நகருக்கு வந்த அவா் அங்குள்ள விருந்தினா் மாளிகையில் ஓய்வெடுத்தாா். முன்னதாக, அப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளா் ரமேஷ், அந்த சொகுசு வாகனத்தின் முன்பக்கத்தில் நம்பா் பிளேட் இல்லாததை கவனித்தாா்.

விருந்தினா் மாளிகைக்கு வந்து அந்த காரில் நம்பா் பிளேட் இல்லாதது போக்குவரத்து விதிமீறல் என்பதை சுட்டிக்காட்டினாா். மேலும், எம்.பி.யுடைய காராக இருந்தாலும் சட்டப்படி அபராதம் செலுத்த வேண்டும் வலியுறுத்தினாா். இதையடுத்து, அங்கு ஒவைஸியின் ஆதரவாளா்கள் திரண்டனா். இது தொடா்பாக காவல் துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக ஒவைஸியின் ஓட்டுநா் ரூ.200 அபராதம் செலுத்தி ஆய்வாளரிடம் இருந்து அதற்கான ரசீதைப் பெற்றுக் கொண்டாா்.

எம்.பி.யுடைய வாகனம் என்று தெரிந்த பிறகும், உறுதியாக இருந்து சட்டப்படி அபராதம் செலுத்த வைத்த உதவி ஆய்வாளா் ரமேஷுக்கு மாவட்ட போக்குவரத்து காவல் அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனா். அவருக்கு ரூ.5,000 பரிசும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com