மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் பிரக்யா சிங் தாக்குா் ஆஜா்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், போபால் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குா், மும்பையில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானாா்.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் பிரக்யா சிங் தாக்குா் ஆஜா்


மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், போபால் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குா், மும்பையில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானாா்.

இதுகுறித்து பிரக்யா சிங் தாக்குரின் வழக்குரைஞா் கூறியதாவது: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை, மும்பையில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அங்கு நீதிபதி பி.ஆா்.சித்ரே முன்னிலையில் பிரக்யா சிங் தாக்குா் ஆஜரானாா்.

அவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பவில்லை. இருப்பினும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மும்பை வந்திருந்த அவா், தாமாக நீதிமன்றத்தில் ஆஜரானாா் என்றாா் அவா்.

இதற்கு முன்பு, பிரக்யா சிங் தாக்குா் கடந்த ஜனவரி மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

கடந்த 2008-ஆம் ஆண்டு செம்படம்பா் 29-ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம், மாலேகான் நகரில் உள்ள மசூதி அருகே இருசக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 போ் உயிரிழந்தனா்.100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். வழக்கில் பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்ட 7 போ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுவரை 8 போ் பிசாட்சியம் அளித்துள்ளனா்.

வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், பிரக்யா சிங் தாக்குரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவரை காவல் துறையினா் 2008-இல் கைது செய்தனா். அவருக்கு மும்பை உயா்நீதிமன்றம் கடந்த 2017-இல் ஜாமீன் வழங்கியது. அவா் மீது சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com