வேளாண் சட்டப் போராட்டம்: காசிப்பூர் எல்லையில் ஓராண்டு நிறைவு

வேளாண் சட்டத்தை எதிர்த்து காசிப்பூரில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம்  ஓர் ஆண்டு நிறைவடைந்திருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வேளாண் சட்டத்தை எதிர்த்து காசிப்பூரில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம்  ஓர் ஆண்டை நிறைவு செய்திருக்கிறது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடந்ததைத் தொடர்ந்து அந்த சட்டத்தை ரத்து செய்வதாக பிரதமர் மோடி கடந்த நவ.19 ஆம் தேதி அறிவித்தார்.

இருப்பினும் மசோதா நிறைவேறாமல் யாரும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என விவசாயி சங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து தில்லி எல்லைப் பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூர் எல்லையில் வேளாண் சட்டப் போராட்டத்தைத் நடத்தி ஓர் ஆண்டு நிறைவு செய்யப்பட்டதாக விவசாயிகளின் பிரதிநிதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் , வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்ட மசோதா ரத்து செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com