காஷ்மீர்: பறிமுதல் செய்த வெடிகுண்டுகளை அழித்த காவல்துறை

காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 24கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளும் , 71 கையெறி குண்டுகளும் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 24கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளும் , 71 கையெறி குண்டுகளும் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது.

காஷ்மீரில் தீவிரவாதிகளிடமிருந்தும் தேடுதலிலும் பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகளை ரீசி மாவட்டக் காவல்துறையினர் அழித்திருக்கிறார்கள். 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் ’ கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன . நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தற்போது இவை அழிக்கப்பட்டிருக்கிறது’ எனத் தெரிவித்தனர்.

மேலும் நீதிமன்ற உத்தரவை அடுத்து பாதுகாப்பான இடத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன் சரியான வழிமுறையைப் பின்பற்றி ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகள் , ஐஈடி , ரீமோட் ஐஈடி மற்றும் 71 கையெறி குண்டுகளும் அழிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com