சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ரூ. 5,000 பரிசு

சாலை விபத்தில் சிக்கியவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவிபுரியும் நபர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 5,000 பரிசாக வழங்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.
சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ரூ. 5,000 பரிசு


சாலை விபத்தில் சிக்கியவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவிபுரியும் நபர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 5,000 பரிசாக வழங்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவிபுரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.

இதையும் படிக்க | 'புதிய வகை கரோனா ஒரு தீவிர அச்சுறுத்தல்' - ராகுல் காந்தி
 
பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000/- பரிசாக வழங்கப்படும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசரகால உதவியினை பொதுமக்கள் செய்யவேண்டும் என்பது ஆகும்.

ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். சாலை விபத்து நடந்த பின் காவல் துறையினர் அவ்விடத்தை பார்வையிட்டு விபத்தின் தன்மை குறித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிப்பர்.

அனைத்து விபத்துக்களும் மாவட்ட ஆட்சியரது தலைமையின் கீழ் இயங்கும்" மாவட்ட அளவிலான மதிப்பீட்டு குழு " ஆய்வு செய்யும். இதில் தெரிவு செய்யப்படும் நேர்வுகள் ரூ.5000/- பரிசுதொகை வழங்குவதற்காக போக்குவரத்து துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com