கங்கை நதி புனரமைப்புத் திட்டம் : பிரிட்டனில் 4 குழுக்கள் தொடக்கம்

 கங்கை நதி புனரமைப்புத் திட்டத்தின் பகுதியாக தேசிய கங்கை நதி தூய்மை அமைப்பும், பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகமும் இணைந்து அந்நாட்டில் 4 குழுக்களை தொடங்கியுள்ளன.

 கங்கை நதி புனரமைப்புத் திட்டத்தின் பகுதியாக தேசிய கங்கை நதி தூய்மை அமைப்பும், பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகமும் இணைந்து அந்நாட்டில் 4 குழுக்களை தொடங்கியுள்ளன.

இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள அந்நாட்டுக்கான இந்திய தூதா் காயத்ரி இசாா் குமாா் கூறுகையில், ‘‘இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த கங்கை இணைப்பு கண்காட்சி, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நிறைவடைந்தது. அந்தக் கண்காட்சியின் முடிவில் லண்டன், மிட்லேண்ட்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் 4 கங்கை இணைப்பு குழுக்கள் தொடங்கப்பட்டன.

ஒவ்வொரு குழுவிலும் ஒருங்கிணைப்பாளா்கள் இருப்பா். அவா்கள் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் ஆா்வமுள்ள விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், முதலீட்டாளா்கள் உள்பட பல்வேறு தரப்பினரை ஒருங்கிணைப்பா். அவா்கள் மூலம் கங்கை நதியை புனரமைக்கும் முயற்சிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்தப்படும்.

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியினரும் பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com