Enable Javscript for better performance
ஒமைக்ரான்: டெல்டா-வை விட 6 மடங்கு பரவும் திறன்; தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு இந்தியா

    ஒமைக்ரான்: டெல்டா-வை விட 6 மடங்கு பரவும் திறன்; தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும்

    By DIN  |   Published On : 29th November 2021 02:28 PM  |   Last Updated : 01st December 2021 01:03 PM  |  அ+அ அ-  |  

    coronavirus

    ஒமைக்ரான்: டெல்டா-வை விட 6 மடங்கு பரவும் திறன்; தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும்


    தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டு, உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வைரஸை விட மற்றவர்களுக்குப் பரவுவதில் 6 மடங்கு பரவும் திறன் கொண்டது என்கிறார்கள் நிபுணர்கள்.

    நாட்டில் கரோனா இரண்டாம் அலை எழக் காரணமாக இருந்த டெல்டா வைரஸைக் காட்டிலும் அதிகம் பரவும் திறன் கொண்ட ஒமைக்ரான் தொற்றுப் பரவிய நோயாளிகளுக்கு, மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை அல்லது காக்டெய்ல் சிகிச்சை பலனளிக்காமல் போகலாம் என்றும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இது நோய் எதிர்ப்பாற்றலை தாண்டிச் செல்லும் ஆற்றல் கொண்டதாகவும், தடுப்பூசி செலுத்தியவர்களயும் தாக்கக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிக்கலாமே.. ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள்: வானிலை மையம்

    நாட்டில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து அதிக உயிர்பலியை ஏற்படுத்திய டெல்டா வகை கரோனா வைரஸ் பாதித்தவர்களை குணப்படுத்த, மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை பலனளித்தது. ஆனால், டெல்டா பிளஸ் வைரஸ் பாதித்தவர்களுக்கு இந்த சிகிச்சை பலனளிக்கவில்லை. கரோனா சிகிச்சையில் மிக முக்கிய சாதனையாக பார்க்கப்பட்ட மோனோக்ளோனல் சிகிச்சை பலனளிக்காமல் போனது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்டா பிளஸ்-ஐ தொடர்ந்து ஒமைக்ரான் அதன் உருமாற்றம் அடைந்த வைரஸ் என்பதால், இதற்கும் மோனோக்ளோனல் சிகிச்சை பலனளிக்காமல் போகலாம் என்று கருதப்படுகிறது.

    இந்த புதிய தொற்றில் ஒரு புதிய வகை, இஸ்ரேலில் ஒருவருக்கு பாதித்திருந்தது. அவர் கரோனா பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர் என்பதால், ஒமைக்ரான் வைரஸ், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இந்த வைரஸ் தொடர்பான பல முக்கிய தகவல்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp