
மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாளை காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ளது. இன்று தொடக்க நாளிலேயே, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதனால் பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. விவாதம் நடத்தாமல் மசோதாவை நிறைவேற்றியதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட அவை, தொடர்ச்சியாக நாளை காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வேளாண் சட்டங்கள் ரத்து: மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்